குழந்தையின் வலி

3


Vali

வாழ்க்கை அடித்த வலியிலே
குழந்தை நீயும் அழுகிறாய்.


கேள்வி கேட்க தெரியவில்லை.
தேம்பி நீயும் அழுகிறாய்.

அம்மா என்ற ஒரு சொல்லில்
இருண்டு விட்டது உலகமே.அப்பா என்ற மறு சொல்லில்
ஆறுதல் சொல்ல யாரும் இல்லை.

விதிவழி போகிறாய்.
விடியல் காண ஏங்கிறாய்.


சண்டை அற்ற நாட்டிலே
சமாதானமாக பிறந்திடு.

சாமி அற்ற நாட்டிலே
சக்தியாக பிறந்திடு.


சாதி அற்ற நாட்டிலே
சரித்திரமாய் பிறந்திடு.

வாழும் போது வாழ்விலே
வாழ்வதற்கும் பிறந்திடு.

தாழ்த்தும் போது எதிர்க்கவே
தைரியமாய் வளர்ந்திடு.