தெற்காசியாவின் மிக உயரமான புத்தர் சிலை இலங்கையில்!!

879

SA

தெற்காசியாவின் மிக உயரமான புத்தர் சிலையை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் 23ஆம் திகதி சனிக்கிழமை அன்று மத்துகமவில் திறந்து வைக்கவுள்ளார்.

மத்துகமவில் உள்ள பட்டமுல்ல கந்த அனைத்துலக பௌத்த நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தர் சிலை 135 அடி உயரமானது என தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.கட்சியின் மத்துகம தொகுதி அமைப்பாளரான ஜெகத் பின்னகொடவிதானவினால் சுமார் 90 மில்லியன் ரூபா செலவில் இந்தப் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் உள்ள பழைமை வாய்ந்த அவுகண புத்தர் சிலையைப் போன்றே இந்த புத்தர் சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புத்தர் சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மாதுளுவாவே சோபித தேரரின் சிலையையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைக்கவுள்ளார்.