இன்றும் நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யலாம்!!

555

Malai

நாட்டின் பல பாகங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்மாகாணத்தின் சில பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனடிப்படையில் மலையகத்தை சார்ந்த பல பாகங்களிலும் மண்சரிவு எச்சரிகையும் விடுக்கப்ட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், கடும்மழை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று மாலை மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.