
புதிய பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூஜித்திற்கு நியமனக் கடிதத்தை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஜயசுந்தரவை பொலிஸ்மா அதிபராக தெரிவு செய்ய அரசியல் அமைப்புச்சபை பரிந்துரை செய்திருந்தது.





