இரண்டாக பிளந்த நிலப்பரப்பு: ஜுராசிக் கடற்கரையில் திடீர் நிலச்சரிவு!!

330

8da476f72f06a276b1f930cdb28c21f1_XL

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஜுராசிக் கடற்கரையில் திடீரென்று நிலப்பரப்பு இரண்டாக பிளந்து அப்பகுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.புகழ்பெற்ற ஜூராசிக் கடற்கரையில் ஏற்பட்ட இந்த திடீர் நிலச்சரிவால் அப்பகுதியில் சுமார் 900 அடி அளவிற்கு பிளவும் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள டன் கணக்கிலான மண் குவியல் சரிந்து விழுந்துள்ளது. இது அப்பகுதியில் விடாமல் பெய்த கன மழையால் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்த திடீர் விபத்தினை அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் படம் பிடித்துள்ளார். அவர் தமது Drone எனப்படும் குட்டிவிமானத்தால் இந்த படங்களை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அப்பகுதி மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக உணர்ந்த அந்த நபர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதிகப்படியானமழை காரணமாக தண்ணீர் அப்பகுதியில் உள்ள சுண்ணாம்புக் கற்களினூடே கலந்திருக்கலாம் என்றும், இதன் காரணமாக எடை அதிகரித்ததால் அப்பகுதியில்உள்ள மண் மேடு உடைந்து இரண்டாக பிளந்து நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.இந்த கடற்கரை பகுதியானது ஐக்கியநாடுகள் மன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.