வடமாகாண விவசாய அமைச்சினால் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 641 பேருக்கு வாழ்வாதார உதவிகள் இன்று(20.04.2016) வவுனியா, பூந்தோட்டம் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் வைத்து வழங்கப்பட்டன.
மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 641 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள், ஆடுகள், மாடுகள், வேலி அடைக்கும் முற்கம்பிகள் என்பன வழங்கப்பட்டன. இதனை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, ம.ஜெயதிலக, விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிக் ரஞ்சன், கால்நடை விவசாயத் திணைக்கள மாவட்ட பணிப்பாளர் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






