இளைஞர் ஒருவரின் வயிற்றில் ஆழமாகப் பாய்ந்த கத்தி!!

601

 
இளைஞர் ஒருவரின் வயிற்றில் ஆழமாகப் பாய்ந்திருந்த கத்தியொன்றை மருத்துவ நிபுணர்கள் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அங்கொடை பொலிஸ் பிரதேசத்தில் இன்று காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

குற்றச் செயல் ஒன்று தொடர்பில் குறித்த இளைஞரை கைது செய்வதற்காக பொலிசார் சென்றிருந்த வேளையில் அவர் கத்திக்குத்துக் காயத்துடன் போராடிக் கொண்டிருந்துள்ளார். அதன் பின் உடனடியாக பொலிசாரின் உதவியுடன் குறித்த இளைஞர் முல்லேரியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

காயத்துக்குள்ளான இளைஞரின் வயிற்றில் ரம்போ வகைக் கத்தியொன்று ஆழமாக பாய்ந்திருந்த போதும் உள்ளுறுப்புகளுக்கு எதுவித சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் ஒன்றரை மணிநேர சத்திர சிகிச்சையின் பின்னர் இளைஞரின் வயிற்றில் பாய்ந்திருந்த கத்தி பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது.

பொலிசாரால் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக குறித்த இளைஞர் தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை அங்கொடை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

1 2