ஓரினச் சேர்க்கையாளர்களினால் இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ்!!

510

1 (3)

இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் நாடெங்கும் 70 எய்ட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக பால்வினை மற்றும் எச்.ஐ.வி.(எய்ட்ஸ்) நோய்த்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

இவர்களுள் 70 சதவீதமானவர்கள் ஆண்கள் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கையாளர்கள் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குறித்த நபர்கள் 25 தொடக்கம் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அவர் இதன்போது தெரிவித்தார். இந்த நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படவேண்டும் எனவும், அவ்வாறு செய்யத் தவறினால் நிலைமை மேலும் விபரீதமாக இடமுண்டு எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.