அதிகரிக்கும் சிறுவர் கட்டாய திருமணம்: பொலிசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

327

syrn

பிரித்தானியாவில் சிறுவர் கட்டாய திருமணம் அதிகரித்துள்ளதாக பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பிரித்தானியாவின் வடக்கு யார்க்‌ஷையர் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 40 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு, பெரும்பாலும் 18வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

எட்டு வயதே நிரம்பிய சிறுவன் கட்டாய திருமண அச்சுறுத்தலுக்கு இரையாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் நடைபெற்றுள்ள 51 சிறுவர் கட்டாய திருமணத்தில் 5 சம்பவங்கள் மட்டும் வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மிட்லாண்ட்ஸ் வடக்கு பகுதியில் நடைபெற்ற 31 சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்ட 19 பேர் மீது நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவர் கூடதண்டிக்கப்படவில்லை.

இதுபோன்ற பெரும்பாலான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கண்டறிந்த போதும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து போதிய ஆதரவு கிட்டாத காரணத்தால் நடவடிக்கை எடுப்பதில் முடக்கு ஏற்படுவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சிறுவர் கட்டாய திருமணத்திற்கு எதிரான சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள 67 வழக்குகளில் சிறுமிகளே பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலும். இதில் ஒன்பதே வயதான சிறுமியும் அடங்குவர்.

இந்த வழக்கினை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்களின் மொழியை வைத்தே வழக்கினை முன்னெடுத்து செல்வதாகவும், தண்டனைக்கு உட்படுத்த வேண்டுமா என்பதை அவர்களது முடிவுக்கு விடுவதாகவும் யார்க்‌ஷையர் பொலிஸ் அதிகாரி மின்றன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்படுபவர்கள் ஒருபோதும் தங்களது குடும்பத்தினர் மீது விசாரணை மேற்கொள்ள அனுமதிப்பதில்லை எனக் கூறும் பொலிசார், பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவும் பாதுகாப்பும் அளிப்பதே தங்களது முக்கிய நோக்கம் எனவும் கூறுகின்றனர். சிறுவர் கட்டாய திருமண விவகாரத்தில் புது திருமணச்சட்டத்தின் அடிப்படையில் கார்டிஃப் பகுதியில் உள்ள வணிகர் ஒருவர் தண்டிக்கப்பட்டதே பிரித்தானியாவில் முதன் முறை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.