ஈக்வேடாரில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

530

1011907800Earth

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்வேடார் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக கடந்த சனிக்கிழமை 4.8 ரிக்டர் மற்றும் 7.8 ரிக்டராக பதிவான இரு நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்றைய நிலநடுக்கம் 6.0 ரிக்டராக பதிவாகியுள்ளது.

போர்ட்டோவிஜோ நகரில் இருந்து நூறு கிலோமீட்டர் வடமேற்கே பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இன்றைய நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதற்கிடையே நேற்று முன்தினமும் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஈக்வேடார் நாட்டை தாக்கியமை குறிப்பிடத்தக்கது.