நுளம்புகளைக் கவர்ந்திழுத்துக் கொல்லும் விளம்பரப்பலகை!!(வீடியோ)

426

thumb_zika

பிரே­சி­லி­லுள்ள சந் தைப்ப­டுத்தும் முகவர் நிலை­யங்கள் நுளம்­பு­களைக் கவர்ந்து கொல்லும் விளம்­பரப் பல­கை­யொன்றை வடி­வ­மைத்­துள்­ளன.

றியோ டி ஜெனிரோ நகரில் காட்­சிப்­ப­டுத்தப் ­பட்­டுள்ள அந்த விளம்­பரப் பல­கை­யா­னது லக்ரிக் அமில கல­வை­யொன்றை வெளி­யி­டு­கி­றது. அந்தக் கலவை மனித வியர்­வையின் வாச­னை­யையும் மனித சுவாசத்தின் போது வெளி­யி­டப்­படும் காப­னீ­ரொட்­சைட்­டையும் கொண்­டுள்­ளது.

மேற்­படி விளம்­பரப் பலகை, அது ஸ்தாபிக்­கப்­பட்­டுள்ள இடத்­தி­லி­ருந்து சுமார் 2.5 கிலோ­மீற்றர் தூரம் வரை­யுள்ள நுளம்­பு­களை தன்பால் கவர்ந்­தி­ழுத்து கொல்லும் வல்­ல­மையைக் கொண் டது என அந்த விளம்­பரப் பல­ கையை வடி­வ­மைத்த போஸ் டர்ஸ் கோப் மற்றும் என்.எஸ்.பி. ஆகிய நிறு­வ­னங்கள் உரிமை கோரி­யுள்­ளன.

பிரே­சிலில் நுளம்­பு­களால் பரவும் ஸிகா வைரஸ் நோய் தொடர்­பான அச்சம் அதி­க­ரித்­துள்ள நிலையில் இந்த விளம்­பரப் பலகை அந்­நோயின் பர­வலை தடுக்க உதவும் என அந்த நிறு­வ­னங்கள் தெரி­விக்­கின்­றன.

எனினும் இந்தத் திறந்­த­வெளி விளம்­பரப் பலகை மக்கள் செறிந்து வாழும் மேற்படி பிராந்தியத்திற்கு மேலும் நுளம்புகளை கவர்ந்திழுக்கும் அபாயமுள்ள தாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.