சென்னையில் திரியும் நாய்களை பட்டிகளில் அடைக்க கூடாது : நடிகை திரிஷா வற்புறுத்தல்!!

392

trihsa1

நாய்களை பிடித்து பட்டிகளில் அடைக்கும் நடவடிக்கைக்கு நடிகை திரிஷா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மேயர் சைதை துரைசாமிக்கு திரிஷா எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

30 ஆயிரம் நாய்கள் தெருக்களில் இருந்து கிட்டத்தட்ட 30,000 நாய்களை பிடித்து அவைகளை சென்னையில் 15 புதிய பட்டிகளில் சிறைவைக்கும் ‘பி’ திட்டத்தை கைவிடுமாறு நான் உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாய்கள் அவை சுகவீனமாக அல்லது வயதானதாக இருந்தாலும்கூட அவற்றின் ஆயுள்காலம் முழுவதும் பட்டிகளில் அடைத்து வைப்பது கொடுமையானது. அனைத்து வயதில் உள்ள நாய்களுக்கும் அன்றாடம் உடற்பயிற்சி, மன தூண்டுதல் மற்றும் புதிய மணங்களை ஆராயும் வாய்ப்பு மற்றும் இதர நாய்களுடன் சமூக பிணைப்பை உருவாக்குவது தேவைப்படும்.

ஒரு பட்டியில் இந்த விஷயங்கள் எதையும் அவைகளால் செய்ய முடியாது. மற்றும் அதுபோன்ற சூழ்நிலைகளில் பல நாய்கள் கடுமையான சோர்வுக்கு ஆளாகின்றன. மற்றும் அவற்றின் மனங்களை இழக்கின்றன.

இந்த அணுகுமுறையை ஜோத்பூரில் முயற்சித்தபோது விளைவுகள் பயங்கரமாக இருந்தது. அடைத்து வைத்தது பல நாய்களை முரட்டுத்தனமாக மாற்றியது. சண்டைகள் மற்றும் பட்டினியால் இறந்தன. இதேபோன்ற ஒரு நிலை பூட்டானில் தெரு நாய்களை சிறைப்படுத்த அந்நாடு முயற்சித்த போது ஏற்பட்டது.

நாய்களை அவற்றின் ஆயுள் முழுவதும் பட்டிகளில் அடைத்து வைப்பது மிகவும் குரூரமானது மற்றும் இது நாய்களை அவற்றுக்கு சிகிச்சை அளித்தப்பிறகு அல்லது கருத்தடை செய்தப்பிறகு அவைகள் கண்டறியப்பட்ட இடத்திலேயே விட வேண்டும் என உத்தரவிடும் விலங்கு கருத்தடை (நாய்கள்) விதிமுறைகள், 2001ஐ மீறிய ஒரு செயலாகும்.

கடந்த காலத்தில் சென்னையில் நாய் பட்டிகள் பயன்படுத்தப்பட்டன. மற்றும் இந்த அணுகுமுறையானது நாய்கள் பெருக்கத்தையோ அல்லது ரேபிஸ் பரவலையோ கட்டுப்படுத்த தவறி விட்டது. தெருக்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்துவதால் அவைகள் இருந்த இடம் காலியாகின்றன. இது அக்கம் பக்க பகுதிகளில் இருந்து வேறு நாய்கள் அங்கு வர வழிவகுக்கிறது.

மேலும் நாய்கள் இனப்பெருக்கம் வேகமாக நடக்கிறது. ஆகவே கருத்தடை செய்யப்படாத நாய்கள் தெருக்களில் இருக்கும் வரை தெரு நாய் பிரச்சினை நீடிக்கத்தான் செய்யும். சிறைக்கைதிகளை போல் நாய்களை அடைத்து வைப்பது சென்னையின் அளவுக்கதிகமான விலங்குகள் பிரச்சனையை ஒருபோதும் தீர்க்காது.

இந்த பிரச்சினைக்கு அதன் மூல ஆதாரத்திலிருந்து நிறுத்துவதன் மூலம் புத்திசாலித்தனமாக மற்றும் மனிதாபிமான முறையில் தீர்வு காண நான் பணிவுடன் உங்களை கேட்டுக் கொள்கிறேன். சென்னையில் தீவிரமான விலங்கு கருத்தடை மற்றும் ரேபிஸ்-எதிர்ப்பு திட்டத்தில் கவனம் செலுத்த தயவுசெய்து முயற்சியுங்கள்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.