
வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானை தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த இரத்தினம் இராசலிங்கம் (58 வயதுடைய 5 பிளைகளின் தந்தை) பெரியகுளம் பகுதியிலிருக்கும் வயலில் வயல் காவலுக்குச் சென்றுள்ளார்.
இன்று அதிகாலை 2மணியளவில் வயலில் படுத்திருந்தபோது எதிர்பாரதவிதமாக வந்த காட்டு யானை குறித்த குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடாத்திச் சென்றுள்ளது. யானையின் தாக்குதலில் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டதுடன் நாடிப்பகுதியிலும் காயம் எற்பட்டதையடுத்து குறித்த நபரின் கூக்குரலையடுத்து பக்கத்து வயலில் காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவரின் உதவியுடன் உடனடியாக நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியர்கள் பரிசோதனை மேற்கொண்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.





