வவுனியா பொலிஸ் தலைமையகம் தலைமையில் நெஸ்டமோல்ட் இன் பிரதான அனுசரனையில் இன்று (23.04.2016) வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு விழா நடைபெற்றுவருகின்றது.
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகிந்த எக்க நாயக்க , வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசூரிய பனாண்டோ, தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
இப் புத்தாண்டு நிகழ்வில் சைக்கிள் ஓட்டப் போட்டிகள், மரதன் ஓட்டப் போட்டி, கயிறு இழுத்தல், சறுக்கு மரம், தலையணைச் சண்டை, விநோதஉடைப் போட்டி , குழந்தை ராணி, பெருநாள் ராணி போட்டிகள் என பல போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
-வவுனியா நகரசபை மைதானத்திலிருந்து எமது செய்தியாளர்-






