ஜெயலலிதாவுடன் இணைகிறார் நடிகை நமீதா!

528

Namitha

பிரபல நடிகை நமீதா இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் திருச்சியில் அதிமுகவில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நமீதா அதிமுகவில் இணைய விரும்பி எழுதிய கடிதம் இன்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அவர் எப்போது இணையப் போகிறார், இதற்கு முதல்வர் ஜெயலலிதா ஒப்புக் கொண்டாரா போன்ற கேள்விகளுக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.

நடிகை நமீதா இப்போது திருச்சியில் முகாமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இன்று பிற்பகல் திருச்சி பொன்மலையில் நடக்கும் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அவர் அதிமுகவில் சேரப் போவதாகவும், முதல்வர் அவருக்கு அந்த மேடையிலேயே அதிமுக உறுப்பினர் அட்டை தருவார் என்றும் தெரிய வந்துள்ளது.

அதிமுகவில் சேர்ந்த கையோடு அவர் இந்தத் தேர்தலில் அக்கட்சியை ஆதரித்து சூறாவளிப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆக, இனி அதிமுக மேடைகளில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமிருக்காது!