ஐதராபாத்தில் வெயில் காரணமாக பாகுபலி–2 படத்தின் படப்பிடிப்பு 2 வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் நேற்று 113 டிகிரி வெயில் கொளுத்தியது. பல மாவட்டங்களில் 110 டிகிரியை தாண்டியதுடன் அனல் காற்று வீசியது. இன்னும் 4 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று வானிலை தகவல் மையம் எச்சரித்து உள்ளது.
வெயில் காரணமாக ராஜமௌலி இயக்கி வரும் பாகுபலி–2 படத்தின் படப்பிடிப்பு 2 வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பிரபாஸ், ரானா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கிறார்கள். வெயிலில் படப்பிடிப்பு நடப்பதால் நடிகைகள் சோர்ந்துபோய் விடுகிறார்கள். இதன் காரணமாக நடிகைகள் பங்கேற்கும் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் படத்தின் மற்ற பணிகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் பிரபாஸ், ரானா ஆகியோரின் உடற்பயிற்சி தினமும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாகுபலி–2 படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் திகதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிட இயக்குனர் ராஜமௌலி திட்டமிட்டுள்ளார்.





