இப்படியும் ஒரு கொடூரமான விபத்து நிகழுமா?

319

 
சுவிட்சர்லாந்து நாட்டில் பல்வேறு விபத்துக்களை ஏற்படுத்தி ஓட்டுனரான முதியவர் ஒருவர் உடல் நசுங்கி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் லூசெர்ன் மாகாணத்தில் உள்ள Mehlsecken என்ற நகரில் நேற்று மாலை 5.15 மணியளவில் A2 சாலையில் பெயர் வெளியிடப்படாத முதியவர் காரில் பயணம் செய்துள்ளார்.

சில நிமிடங்களுக்கு பிறகு நீண்ட தூரத்தில் ரயில் வருவதற்காக வாகனங்கள் வரியில் காத்துக்கொண்டு இருந்துள்ளது.அப்போது, கட்டுப்பாட்டை இழந்த முதியவரின் கார் மற்ற வாகனங்களை முந்திக்கொண்டு தண்டவாளத்தில் ஏறி விபத்துக்குள்ளானது.

ஆனால், அப்போதும் நிற்காத அந்த கார் தண்டவாளத்தில் இருந்து விலகி மற்றொரு கார் மீது மோதி, பின்னர் நின்றுக்கொண்டு இருந்த பெரிய லொறியின் பின்புறத்தில் அசுர வேகத்தில் மோதி அப்பளம் போல் நொருங்கியுள்ளது.

இந்த விபத்தில் காரை ஓட்டிய முதியவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மற்றொரு காரில் பயணம் செய்திருந்த 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக 2 ஹெலிகொப்டரில் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், முதியவரின் கார் எதனால் கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாராக ஓடியது என்பது குறித்து தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 4 1 2