வவுனியாவில் மூன்று சிறுவர்களைக் காணவில்லை..!!

852


missingperson

வவுனியாவில் மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் காணாமல் போயிருக்கின்றமை தொடர்பில் வவுனியா காவல் நிலையத்தில் பெற்றோர்களால் முறைப்படு செய்யப்படடுள்ளன.வவுனியா கல்மடு பூம்புகார் பகுதியைச் சேர்ந்த 14 வயதான பூ.சதீஸ் என்ற சிறுவனைக் காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர். இச்சிறுவன் தினமும் ஆலயம் ஒன்றிற்கு பூசையினை மேற்கொள்ள சென்று வரும் நிலையிலேயே கடந்த 5ம் திகதி சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை.

இதேவேளை 13 வயதான சு.தில்சான், 9 வயதான நா.டிலக்சன் முதலாக மூன்று சிறுவர்களைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன இச்சிறுவர்களை இராணுவத்தினரும் காவல்துறையினரும் மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் தேடுவதாகத் தெரிவிக்கின்றனர்.அண்மைய காலங்களில் வவுனியாவில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதுடன் இந்த ஆண்டு மார்ச் மாதமும் மூன்று சிறுவர்கள் காணாமல் போய் மீட்கப்பட்டிருந்தனர். கடந்த பல ஆண்டுகளாக சிறுவர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.