இங்கிலாந்தில் பாதாள அறைக்குள் பெருந்தொகை தங்கம்!!

551

Elisabeth

இங்கிலாந்து நாட்டில் உள்ள பாதாள அறையில் 5,134 டன் எடையுள்ள தங்கக் கட்டிகளை அந்நாட்டு அரசாங்கம் இரகசியமாக பாதுகாத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள திரெட்நீடில் சாலையில் இங்கிலாந்து வங்கி (Bank of England) இயங்கி வருகிறது. இந்த வங்கி அமைந்துள்ள நிலப்பரப்பிற்கு கீழே உள்ள பாதாள அறைகளில் தான் 5,134 டன் எடையுள்ள தங்க கட்டிகள் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

உலகில் உள்ள ஒட்டுமொத்த தங்கத்தின் இருப்பை ஒப்பிடும்போது, இங்குள்ளது சுமார் ஐந்தில்ஒரு பகுதி ஆகும். சுமார் 3 இலட்சம் சதுரடி பரப்பளவில் உள்ள இந்த இரகசிய அறையில் உள்ள தங்கத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 172 பில்லியன் பவுண்ட் ஆகும்.

இதுமட்டுமின்றி, லண்டன் நகர வீதிகளின் நிலப்பரப்பிற்கு கீழ் ஆங்காங்கு சுமார் 1,000 டன் எடைக்கும் அதிகமான தங்கக் கட்டிகளும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 1930-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த இரகசிய பாதாள அறைகளுக்கு ஒரு சிலர் மட்டுமே செல்ல முடியும். அதுமட்டுமில்லாமல், இந்த அறைகளை திறப்பதற்கு குறிப்பிட்ட உயர் அதிகாரி ஒருவரின் ‘குரல் ஒலி’ மற்றும் 3 அடி நீளமுள்ள சாவியும் பயன்படுத்தப்படுகிறது.

இங்கிலாந்து மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த 2012-ம் ஆண்டு கடைசியாக இந்த இரகசிய பாதாள அறையை ஆய்வு செய்தார், என்பது குறிப்பிடத்தக்கது.