களனி, வத்தளை பிரதேசங்களில் ஐஸ் மழை : சில வீடுகளுக்கும் சேதம்!!

570

Ice Rain

களனி, வத்தளை மற்றும் அவற்றை அண்மித்த பகுதிகளில் நேற்று மாலை பெய்த மழையின்போது பனிக்கட்டிகளும் விழுந்திருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மழையைத் தொடர்ந்து வீசிய பலத்த காற்றால் இப்பிரதேசங்களிலுள்ள சில வீடுகளும் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த மழை ஓய்ந்தபின் வீட்டுக் கூரைகளிலும், தரையிலும் பனிக்கட்டிகள் விழுந்திருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.