யாழில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 16 இளைஞர்கள் கைது!!

418

arrest (1)

இரவு வேளையில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய 16 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இரவு வேளையில் நடமாடியதுடன், மது போதையில் தகராற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.

குற்றச் செயல்களை தடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் குழுவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். நகரப் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமாக நின்ற எட்டுப் பேர், மதுபோதையில் நின்ற அறுவர் உட்பட 16 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.