வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார வர்த்தக மையம் சம்பந்தமாக த.தே.கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று மாலை வவுனியாவில் நடைபெற்றது.
இத்திட்டத்திற்கான காணியைத் தெரிவு செய்வதற்கான சர்ச்சையை முதலமைச்சரை சந்திப்பதனூடாக தீர்ப்பதெனவும், வவுனியாவைவிட்டு இத் திட்டம் மாற்றப்படாதிருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுக்க கோருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து வவுனியா பொருளாதார வர்த்தக மையம் சம்பந்தப்பட்ட விடயமாக நேற்றைய முடிவின் பிரகாரம் கூட்டமைப்பு பிரதிநிதிகளும், வர்த்தகர்களும் வடக்கு முதலமைச்சர் மற்றும் வட மாகாண விவசாய அமைச்சர் ஆகியோரை இன்று(25.04.2016) கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடப்பட்டது.
இப் பொருளாதார வர்த்தக மையத்தை வவுனியாவில் நிறுவுவதற்கும், வவுனியாவைவிட்டு மாற்றப்படாதிருப்பதற்கும் ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இதன்போது முதலமைச்சர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், வவுனியா வரத்தகர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.