
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட வை.எம்.எம்.ஏ. குறுக்கு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கராஜ் வேலை செய்யும் முச்சக்கரவண்டி உரிமையாளரான எச்.எம்.முஸம்மில் என்பவர் வழமை போன்று தனது கடமைகளை முடித்துக் கொண்டு தனது வீட்டுக்கு முன்னால் வீதியோரமாக முச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
வீட்டுக்கு முன்னால் பெரிதாக வெளிச்சம் தெரிவதைக் கண்டு வெளியே வந்து பார்த்த போது தனது முச்சக்கர வண்டி தீப்பிடித்துக் கொண்டு எரிவதை அவதானித்துள்ளார்.உடனடியாக அயலவர்களின் உதவியுடன் தீயை அணைப்பதற்கு எடுத்த முயற்சி பயனின்றி முச்சக்கர வண்டி முற்றாக தீயினால் சேதமடைந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக முச்சக்கர வண்டி உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





