மனநோயாளி வெறிச்செயல்: பத்து வயது சிறுவன் குத்திக் கொலை

438

1 (14)

கேரள மாநிலத்தில் இன்று மனநிலை பாதிக்கப்பட்ட நபர் பத்து வயது சிறுவனை 17 இடங்களில் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்குள்ள கொச்சி மாவட்டம், புல்லேப்பாடி பகுதியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவனான கிறிஸ்டி ஜான் இன்று காலை தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள கடையில் இருந்து பால் வாங்கிக்கொண்டு வந்தபோது வழிமறித்த அஜி தேவசியா(40) என்பவர் ஜானை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

உடலில் 17 இடங்களில் கத்திக்குத்து விழுந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜானை உடனடியாக அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். எனினும், பத்து நிமிடங்களுக்குள் ஜான் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் புல்லேப்பாடி பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.ஜானை கத்தியால் குத்திக்கொன்ற அஜி தேவசியா கொடிய போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அவரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.