பிரபல நடிகர் அஜய் கிருஷ்ணன் தற்கொலை!!

416

Ajay

நான்கு கோடி ரூபாய் செலவு செய்து தயாரித்த படத்தின் பிரிவியூவை பார்த்துவிட்டு மலையாள நடிகரும் படத் தயாரிப்பாளரான அஜய் கிருஷ்ணன் தற்கொலை செய்துக்கொண்டது திரையுலைகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் மனையில்குளங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் அஜய் கிருஷ்ணன்(28). இவர் மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த மெம்மரீஸ், ‘சீன் 1 நம்முடைய வீடு’ உள்பட சில மலையாள படங்களிலும், தொலைகாட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர், பிரபல நடிகர் ஆஸிப் அலியை கதாநாயகனாக வைத்து ‘அவருடே ராவுகள்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வந்தார். அஜய் தயாரித்த முதல் படம் இதுவாகும். இந்த படத்தில் ஆசிப் அலி, உன்னி முகுந்தன், வர்கீஸ், வினய், ஹனி ரோஸ், லீனா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டன. அடுத்தமாதம் படத்தை வெளியிட அஜய் கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் இவர் 23ம் திகதி இரவு, எர்ணாகுளத்தில் இருந்து கொல்லத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டின் முதல்மாடி அறையில் தங்கியிருந்தார்.

சனிக்கிழமையன்று மாலை வரை அறை திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை திறந்து பார்த்தனர். அப்போது அஜய் கிருஷ்ணன் தூக்குப்போட்டு தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இவர் தற்கொலைக்குக் காரணம் இவர் தயாரித்த படம்தான் என்று கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் ‘அவருடே ராவுகள்’ படத்தின் பிரிவியூ ஷோ திரையிடப்பட்டுள்ளது. படம் தயாரிப்பாளர் அஜய்க்கு திருப்தி அளிக்கவில்லை. 4 கோடி செலவு செய்து தான் தயாரித்த படம் வர்த்தக ரீதியாக வெற்றி அடையாதோ என்று அச்சமடைந்த அஜய், இரண்டு நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமையன்று அஜய் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தங்களது ஒரே மகனை பறிக்கொடுத்த அஜய்யின் பெற்றொர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தான் தயாரித்த மலையாளப் படத்தை வெற்றி பெறாது என்று தயாரிப்பாளர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் மலையாள திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.