பாடப் புத்தகங்களை வழங்குவதாக ஏமாற்றி மாணவனை துஷ்பிரயோகம் செய்த அதிபர்!!

487

Abuse

இரத்தினபுரி – குட்டிகல பிரதேசத்தில் மாணவர் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக அதிபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த 16ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குட்டிகல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் சில பாடப் புத்தகங்களை பெற்று கொள்வதற்காக ஆசிரியர் விடுதிக்கு சென்றுள்ளார். இதன் போது அதிபர் ஒரு புத்தகத்தை பெற்று கொடுத்து இன்னும் சில புத்தகங்களை பெற்று தருவதாக கூறி மாணவனை அறைக்குள் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் அந்த அறையில் வைத்து மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் கற்கும் 15 வயதான சிறுவனே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சந்தேக நபரான அதிபர் குட்டிகல காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.