வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வடபகுதி முகாமையாளர் வவுனியாவில் சடலமாக மீட்பு!

898

suicide_image

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வடக்கு மாகாண முகாமையாளர் வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பணியகத்தின் வவுனியா மாவட்ட கிளை அலுவலகத்தில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட 50 வயதான எஸ்.புருஷோத்தமன் என்ற அதிகாரியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் அலுவலக வளாகத்தில் தங்கியிருந்து வந்துள்ளார்.

அவரது சாரதி இன்று அதிகாலையில் அவரை நித்திரையில் இருந்து எழுப்பிய போது, அவர் எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து அவர் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.