வௌ்ளவத்தையில் நீர்த் தாங்கியில் வீழ்ந்து ஒரு வயதான குழந்தை உயிரிழப்பு!!

515

Baby

கொழும்பு வௌ்ளவத்தை பகுதியில் வீட்டு முற்றத்தில் கட்டப்பட்டிருந்த நீர்த் தாங்கியில் விழுந்து ஒரு வயது பூர்த்தியடைந்த குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த அனர்த்தம் நேற்று மாலை 4.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

சம்பவம் தொடர்பில் ஆரம்ப கட்ட நீதவான் விசாணைகள் முன்னெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.