பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி!!

525

Bus

காலி – கொழும்பு பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த முதியவரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த முதியவர் 72 வயதுடைய கிங்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த வெல்லகே கருணாதாச என தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பஸ்ஸின் சாரதி மேலதிக விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.