ரயிலில் மயக்க மருந்து கலந்த கோப்பியை பருகிய முதியவரிடம் கொள்ளை!!

544

134-Train_On_The_South_Coast_Line-252269-Main_banner-Sri-Lanka-By-Rail

முன்பின் தெரியாத நபரொருவர் தந்த கோப்பியைப் பருகியதும் மயக்கமுற்ற 70 வயது முதியவர் ஒருவரிடமிருந்த 8 ஆயிரம் ரூபா பணத்தையும், அவரது மகளின் வெளிநாட்டுப் பயணத்துக்கான ஆவணங்களையும் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவமொன்று நேற்று பொல்காவலை ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. இந்த முதியவர் பொல்காவலை ரயில் நிலையத்திலுள்ள வாங்கு ஒன்றில் மயங்கிக் கிடந்தபோது அவரை மீட்ட புகையிரதப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் தனக்கு நேர்ந்த அவலத்தைக் கூறியிருக்கிறார்.

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மீனவரான இந்த முதியவர் கடந்த 24ஆம் திகதி தனது மகளது வெளிநாட்டுப் பயணத்துக்கான ஆவணங்களுடன் கொழும்பிலுள்ள முகவர் நிலையத்துக்கு வருவதற்காக, மட்டக்களப்பு கொழும்பு நகர்சேர் விரைவு ரயிலில் ஏறியிருக்கிறார். பொலனறுவை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய இளைஞன் ஒருவன் இவருடன் சிநேகபூர்வமாக உரையாடிக்கொண்டே கையில் வைத்திருந்த போத்தலில் இருந்த கோப்பியைக் கொடுத்திருக்கிறான். அதைக் குடித்த முதியவர் மயக்கமடைந்திருக்கிறார். பொல்காவலை ரயில் நிலையத்தில் விழிப்பு வந்ததும் இறங்கி அங்கிருந்த வாங்கில் படுத்து மீண்டும் உறங்கியிருக்கிறார்.

மீட்கப்பட்ட முதியவரை பொல்காவலை வைத்தியசாலையில் சேர்த்த புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரது காத்தான்குடி வீட்டுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.