வாரத்தில் இரண்டு நாள் மட்டுமே அலுவலகம்: வெனிசூலா அரசு அதிரடி!!

481

download

வெனிசூலாவில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த அலுவலகங்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.வெனிசூலா நாட்டுக்கு தேவையான பெரும்பாலான மின்சாரம் எல் குரி அணையில் இருந்தே பெறப்படுகிறது. தற்போது அணையில் தண்ணீரின் அளவு குறைவாக உள்ளதால் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்த முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை தோறும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.தற்போது இந்த விடுமுறையை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ வெளியிட்டுள்ளார்.

வரும் வாரங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெனிசூலாவில் தற்போது 2.6 மில்லியன் அரசு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.வேலை செய்யும் இரண்டு நாட்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படுமா அல்லது விடுமுறை விடப்பட்டுள்ள நாட்களுக்கும் ஊதியம் வழங்கப்படுமா என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.