
நாவலப்பிட்டி – பார்கேபல் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தச் சம்பவம் நேற்று பகல் 11 மணியளவில் இடம்பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவி தலைக்கு கட்டும் ரிபன் பட்டியைக் கொண்டே இவ்வாறு தற்கொலை செய்திருப்பதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு தற்கொலை செய்து பலியான சிறுமி 12 வயதான சிவகுமார் நிரஞ்சலா என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இவரது பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





