பேஸ்புக்கில் அரசாங்கத்தை விமர்சித்தவரின் பதவி பறிப்பு!!

598

1 (70)

பேஸ்புக்கில் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த விமான நிலைய ஊழியர் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.மத்தளை விமான நிலையத்தைச் சேர்ந்த செயற்திட்ட இணைப்பாளரான பிரியங்கர என்பவர் சுதந்திரக் கட்சியின் மஹிந்த அணிக்கு ஆதரவான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர். இவர் தனது அரசியல் ஆதரவை அடிக்கடி பேஸ்புக் வலைத்தளத்திலும் பதிவேற்றியுள்ளார்.

இந்நிலையில் அரசாங்க பதவியில் இருந்து கொண்டு அரசாங்கத்தையே விமர்சிக்கும் வகையில் பதிவுகளை தரவேற்றியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது தொடர்பில் நேற்று விமான நிலைய அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் போது அவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பிரியங்கரவை சம்பளமில்லாத தற்காலிக பணி நீக்கத்துக்கு உட்படுத்தி விமான நிலைய அதிகார சபை உத்தரவிட்டுள்ளது.முறையான விசாரணைகளின் பின்னர் அவர் நிரந்தர பணிநீக்கத்துக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிய வந்துள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியல் நிலைப்பாட்டு சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்துவதாக வார்த்தை ஜாலம் காட்டிக் கொண்டிருக்கும் அரசாங்கத்தின் அண்மைக்கால போக்குகள் அனைத்தும் வாக்குறுதிகளுக்கு மாற்றமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.