திருகோணமலைக்கு வந்த தென்னாபிரிக்க கப்பல் தலைமை அதிகாரி உயிரிழப்பு!!

871

captain-spiro_9692856_1211243.570x1140

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் திருகோணமலை எண்ணை நிலையத்திற்கு எண்ணை நிரப்புவதற்காக வந்த கப்பலில் பணிபுரியும் தலைமை அதிகாரி சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Mw, Ceapual எனும் எண்ணைக் கப்பலில் பணிபுரியும் தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த றாடோ கிட்வொகோ (RODO WGITVOGO) என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கப்பலானது திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியில் நங்கூரம் இடப்பட்டிருந்தபோது கப்பலில் இருந்து குறித்த நபர் கடலில் விழுந்ததாகவும் அதன்பின்னர் குறித்த நபர் சிகிச்சைக்காக கடற்படையினரால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்றிரவு 8.30 மணியளவில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.