சிவில் உடையில் ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்திய பொலிசார் தற்காலிக பணிநீக்கம்!!

413

srilanka

சிவில் உடையில் ஆயுதங்களுடன் சென்று வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய நான்கு பொலிசார் தற்காலிக பணிநீக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.தம்புள்ளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு பொலிசாரே இவ்வாறு தற்காலிக பணிநீக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும், இரண்டு சார்ஜண்ட் உத்தியோகத்தர்களும், ஒரு கான்ஸ்டபிளும் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரும் நேற்று மாலை தமது பணிநேரத்தின் பின்னர் சிவில் உடையில் ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு போய் மதுபான சாலையொன்றில் அட்டகாசம் செய்துள்ளனர்.

ஆயுதங்களைக்காட்டி இலவசமாக மதுபானம் பெற்றுக் கொள்ளவும் முயற்சித்துள்ளனர்.இதுகுறித்து தம்புள்ளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி மீகஹகும்புரவிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த பொலிசார் நால்வரும் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.