குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதாக ஏமாற்றி பெண் பலாத்காரம்!!

466

1 (54)

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடும்பப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாகக்கூறி ஏமாற்றி, 35 வயது பெண்ணைப் பலாத்காரம் செய்ததாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரிலுள்ள ஹனுமந்கார் பகுதியைச் சேர்ந்த 35 வயதுபெண் ஒருவர் பொலிசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், அவர் தன்னை குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி ஏமாற்றி, 6 பேர் கொண்ட கும்பல் ஜெய்ப்பூர் அழைத்துச் சென்றதாகவும்,

அங்கு அவர்கள் தன்னைப் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார்,இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பலாத்கார புகார் மட்டுமின்றி, மற்றொரு புகாரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மீது அப்பெண் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த நபரை பணியில் இருந்து நீக்கியுள்ளது அவரது நிறுவனம்.

இதுதொடர்பாக அந்நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், ‘அந்த நபர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. ஆனால், அதற்கு உரிய விளக்கத்தை அவர் அளிக்கவில்லை. இதனால், அவரை பதவியில் இருந்து நீக்கியுள்ளோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.