ஓடி விளையாடு பாப்பா13115626_1075525155822401_61695722_n

வீதியில் விளையாட்டு
இன்பான காற்றோடு.


சுவாசத்தில் ஒரு பாட்டு
துள்ளலான மெட்டோடு.

ஓடிக் களைத்திடினும்
உற்சாகமான விளையாட்டு.கணனியில் கண்ணயர்ந்து
காணமல் போவதை நீ மாற்று.

ஓடிப்பிடித்து சுதந்திரமாய்
ஒளிந்து நீயும் விளையாடு.


தேடி நட்பு நாடி வரும்.
தேகப்பயிற்சி கூடி வரும்.

பாடப்படிப்பு முடிந்தவுடன்
பம்பரமாய் சுழன்றாடு.


கிட்டிப்புள்ளும், கிளித்தட்டும்
களிப்பு தரும் விளையாட்டு.

வானம் பார்த்து மகிழ்வுடனே
பட்டம் விடு காற்றோடு.

பகை மறந்து அன்போடு
பந்த அடித்து விளையாடு.

சரி பிழை எது என்று முட்டி
மோதிப் பார்த்துவிடு.

நேர்மையாக நீ ஆடு.
நேரம் மறந்து களித்தாடு.

வீதியிலே விளையாட்டு.
சமூக விளிப்புத்தரும் விளையாட்டு.

கணனியில் விளையாட்டு
அறிவு தரும் வகைபாரு.

தெருவிலே விளையாட்டு
உணர்வு தரும் உறவோடு.

-குமுதினி ரமணன்-