விமானத்தைத் தாக்கிய மின்னல் : அலறித் துடித்த பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!!(காணொளி)

961

flight

பிரித்தானியாவில் தரையிறங்க ஆயத்தமான விமானத்தை மின்னல் தாக்கியதால் அதில் இருந்த பயணிகள் பீதியில் அலறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியா ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம் ஐஸ்லாந்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று எதிர்பாராத வகையில் மின்னல் ஒன்று விமானத்தின் இறகு பகுதியை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பீதியில் அலறியுள்ளனர்.

இருப்பினும் மின்னல் தாக்கிய விமானத்தை பிரித்தானிய ஏர்வேஸ் விமானி பத்திரமாக ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்.

விமானத்தை மின்னல் தாக்கிய போது அந்த ஒரு நொடி வானம் இரத்தச் சிவப்பாக காட்சியளித்துள்ளதாக கூறுகின்றனர்.

விமானத்தில் இருந்த பலரும் மின்னலின் தாக்கத்தை உணர்ந்ததாகவும், அது விமானத்தில் மோதுவதை தங்களால் உணர முடிந்தது எனவும் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் பீதியுடன் தெரிவித்துள்ளனர்.

அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானம் தரையிறங்கியதில் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

விமானம் பாதுகாப்புடன் தரையிறங்கியுள்ளது, இருப்பினும் முழுமையான சோதனைக்கு பின்னரே அடுத்த சேவைக்கு இந்த விமானத்தை பயன்படுத்த இருப்பதாக பிரித்தானியா ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, அன்றைய தினம் மட்டும் 3 விமானங்கள் மீது மின்னல் தாக்கியுள்ளதாக விமானிகள் நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மின்னல் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளதால் அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை என கூறப்படுகிறது.