3 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட பெண்ணின் தலை கண்டுபிடிப்பு!!

506

Eritrean-Murdered-Victim’s-Skull-Found2

கனடா நாட்டில் 3 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

ரொன்றொன்றோ நகரை சேர்ந்த Rigat Ghirmay(28) என்ற பெண்ணை Adonay Zekarias என்பவர் கொடூரமாக கொலை செய்துவிட்டு, அவரது உடலகை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு நிகழ்ந்த இந்த கொலையை தொடர்ந்து அதே வருடம் பெண்ணின் தலையில்லாத உடல் மட்டும் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியபோது, கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் விதித்தது.

இந்நிலையில், Lavender Creek Trail என்ற பகுதியில் இருந்து கடந்த புதன் கிழமை அன்று பொலிசாருக்கு அழைப்பு வந்துள்ளது.

பூங்காவிற்கு அருகில் உள்ள ஒரு பகுதியில் இருந்த பையை பொலிசார் சோதனை செய்தபோது, அதற்குள் மண்டை ஓடு ஒன்று இருந்ததை கண்டுபிடித்தனர்.

உடனடியாக தடவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அதனை சோதனை செய்தபோது, 2013ம் ஆண்டு கொல்லப்பட்ட இளம்பெண்ணின் தலை தான் அது என உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக அந்த பகுதிக்கு சீல் வைத்த பொலிசார் அங்கு சல்லடையிட்டு தீவிரமாக தேடுதலை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.