உறவினப் பெண்ணிடம் தகாத உறவில் ஈடுப்பட முயன்ற நபர் கைது!!

553

Abuse

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை பம்பரக்கலை தோட்டத்தில் நேற்று (30.04.2016) மாலை இடம்பெற்ற பிறந்தநாள் வைபவம் ஒன்றில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பம்பரக்கலை தோட்டத்தில் பிறந்தநாள் வைபவம் ஒன்றில் இடம்பெற்ற வீட்டில் மது அருந்திவிட்டு உறவின பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுப்பட முயன்ற நபர் ஒருவரை அப்பெண்ணின் கணவர் தாக்கியதன் மூலம் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் நபரை தாக்கியவர் உட்பட மேலும் இருவர் லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிறந்தநாள் வைபவத்தில் மது அருந்திய நிலையில் ஆட்டம், பாடல்களுடன் சந்தோஷகளிப்பில் இருந்த வேளையில் நபர் ஒருவர் தனிமையில் இருந்த திருமணம் முடித்த பெண் ஒருவரிடம் தகாத உறவை மேற்கொள்ள முயற்சித்திருப்பதாகவும், இது தொடர்பாக அப்பெண் கணவரிடம் முறையிட்டதன் பின்னர் இந்த கைகலப்பு சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.