கடதாசி அட்டைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படகில் பயணம்!!(வீடியோ)

393


 
கடதாசி அட்டைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படகொன்றைப் பயன்படுத்தி நதியொன்றில் பயணம் செய்து பிரித்தானியர்கள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.

ஹரி டவியர் மற்றும் சார்ளி வோலர் ஆகிய மேற்படி இருவரும் தொழிற்சாலைகளிலிருந்து வீசப்பட்ட கடதாசி பொருட்களை மீள் சுழற்சிக்குட்படுத்தி இந்தப் படகை வடிவமைத்துள்ளனர்.‘திஸ் வே அப்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படகை ஒரு வாரத்தை செலவிட்டு ஹரியும் சார்ளியும் வடிவமைத்துள்ளனர்.

இந்தப் படகானது தேம்ஸ் நதியில் மூழ்காது வெற்றிகரமாக பயணித்துள்ளது. அந்தப் படகு தண்ணீரில் மூழ்குவதைத் தடுக்க அதன் மேற் பகுதியில் நீர் கசியாத மெழுகு கடதாசி ஒட்டப்பட்டிருந்தது.மேற்படி படகில் அதனை உருவாக்கிய இரு சாதனையாளர்களும் தொலைக்காட்சி அறிவிப்பாளரும் பயணத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. காணொளியைப் பார்க்க


2 1 3