மரம் பேசுகிறேன்..

1


Tree

பூமித்தாயின் மடியில் உயிர் முட்டி வந்தேன்.
சூரியனின் ஒளிபட்டுபச்சையமும் கொண்டேன்.
உயிரினங்கள் வாழ்வோடுஉறவாக நின்றேன்.
பிராணவாயு தூய்மையாக உமக்களித்து மகிழ்ந்தேன்.
எனைமறந்து நகரமயம், நாகரீகம் விவேகமற்ற விபத்தே.


போதிமரப்புத்தனும் என் மடியில் அமர்ந்தே
இருந்த இடத்தில் ஞானம் பெற்றே மூவுலகம் வென்றான்.
ஆதி மனிதன் சுற்றி வணங்கிய இயற்கைத் தெய்வம் நானே.
ஆயுர்வேத மருந்தாக நீண்ட ஆயுள் தந்தேன்.

ஞானம் பெற முனிவரெல்லாம் என் இடம் தேடி வருவார்.
விஞ்ஞானம் என எனை மறந்து ஓசோன் துளை தானே.
நீர் வணங்கும் போது வணங்குகின்ற இயற்கை தெய்வம் நானே.மழை என்று கேட்ட போது மேகம் தொட்டு வந்தேன்.
நிழல் என்று கேட்டபோது நிஜமாகக் குளிர்ந்தேன்.

வனவிலங்கு வாழ்வளித்து பிள்ளை போலக்காத்தேன்.
உணவுச்சங்கிலி காக்கும், எனை அறுந்திடாமல் காப்பீர்.


வீடு, தளபாடமென உயிர் முடித்தும் வந்தேன்.
வெட்டு முன்னே ஊன்றி எனை விதைத்திடுதல் நலமே.

பக்தி என்று வந்த போது மாலையாகத் தொழுதேன்.
காதல் என்று வந்த போது ரோஜாவிலும் சிவந்தேன்.
பசி என்று கேட்ட போது பழமாகத் தந்தேன்.
ருசி என்று கேட்ட போது அறு சுவையில் ருசித்தேன்.
உப்பென்று கடலிடமே ஒரு சுவையஅளித்தேன்.
வாசம் என்று நுகர்ந்த போது சந்தனமாய் மணந்தேன்.


காலநிலை சீராக என் சிறப்பறிதல் நலமே.
கவிதை கொண்டு
என் மனதை அறியவைத்த பெரிய மனிதர் அறமே.

-குமுதினி ரமணன்-