
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள உணவகத்தின் பணியாளர் ஒருவருக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படும், சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள தம்புள்ள பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.துப்பாக்கியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தம்புள்ளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, தம்புள்ளை நீதவான் குலதுங்க பண்டாரவால் அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இதேவேளை, குறித்த உப பொலிஸ் பரிசோதகரை தற்காலிகமாக பணிநீக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் இருந்ததாக கூறப்படும் தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் சார்ஜன்கள் இருவர் மற்றும் கான்ஸ்டபில் ஒருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இது குறித்து விஷேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தம்புள்ளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





