பாதியில் நின்ற ரோலர்கோஸ்டர், காப்பற்றும் படி கதறி அழுத மக்கள்!

301

People-on-a-rollercoaster-007

பிரித்தானியாவின், Staffordshire-ரில் உள்ள தீம் பார்க்கில், மக்கள் சவாரி செய்த ரோலர்கோஸ்டர் பாதியில் கோளாறாகி நின்றதில், அதில் பயணம் செய்த மக்கள் தங்களை காப்பற்றும் படி கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் உள்ள மிக பிரபலமான தீம் பார்க்கில் ஒன்று அல்டன் டவர்ஸ்-ல்(Alton towers), அங்கு உள்ள ரோலர்கோஸ்டரில் 28 பேர் சவாரி செய்துள்ளனர்.

சவாரியின் போது ரோலர்கோஸ்டர் பாதியில் கோளாறாகி நின்றுள்ளது, இதில் சவாரி செய்த 27 பேர் தலைகீழாகத் தொங்கிய படி சிக்கியுள்ளனர்.நேரமாக ஆக பீதியடைந்த மக்கள், அவர்களை காப்பற்றும் படி கதறி அழுதுள்ளனர்.இந்நிலையில். தீம் பார்க் ஊழியர் ஒருவர் குறித்த ரோலர்கோஸ்டர் மீது ஏறி சிக்கியுள்ளவர்களுக்கு தைரியம் தெரிவித்துள்ளார்.

ரோலர்கோஸ்டரை மீண்டும் துவக்க முயற்சி செய்த ஊழியர், அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு. 27 பேரை தரைக்கு கொண்டு வந்துள்ளார்.இதை தொடர்ந்து., சமீபத்தில் பெய்த கனமழையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரோலர்கோஸ்டர் சவாரி மூடப்பட்டதாக, ஊழியர்கள், பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனார்.சமீபத்தில் பெய்த கனமழையில் குறித்த ரோலர்கோஸ்டர் முறிந்து விழுந்துள்ளது. தற்போது, விடுமறை நாட்கள் தொடங்கியுள்ளதால், முறிந்த விழுந்த அதே ரோலர்கோஸ்டர் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே ரோலர்கோஸ்டரில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் சிக்கி ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள், குறித்த தீம் பார்க் உரிமையாளர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.இந்த வழக்கில் Alton towers உரிமையாளர். சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளது நிருபனமாகி உள்ளதாகவும், அவருக்கு பல மில்லியன் அபராதம் விதிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.குறித்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் மே-30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.