கோல் கீப்பராக மாறும் டோனி!!

354

msd

உலகின் மிகப்பெரிய இங்கிஷ் கால்பந்து லீக் தொடரின் இந்திய தூதராக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் என்று மூன்றுவித இந்திய அணிக்கும் டோனி தலைவராக உள்ளார்.

2007ல் T20, 2011ல் உலகக் கிண்ணம், இந்த ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணம் என்று மூன்று கிண்ணங்களை வெற்றிபெற்றுள்ளார்.

இவரை, இங்கிலீஷ் பிறீமியர் லீக் கால்பந்து தொடரின் இந்திய தூதராக நியமித்தது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம். இதையடுத்து, இத்தொடரை பிரபலப்படுத்தும் விளம்பரங்களில், அடுத்த வாரம் முதல் டோனி தோன்றவுள்ளார்.

அதாவது கால்பந்து போட்டியுடன் இணைந்திருங்கள் என்று அனைத்து விளையாட்டு ரசிகர்களையும் டோனி அழைக்கவுள்ளார். டோனி இயற்கையாகவே கால்பந்து போட்டிகளில் ஆர்வம் கொண்டவர். மான்செஸ்டர் யுனைடெட் கழக அணியின் தீவிர ரசிகர்.

இது குறித்து டோனி கூறுகையில் கிரிக்கெட் போட்டிகளில் பிசியாக இல்லாத வார நாட்களில் கால்பந்து போட்டிகளில் இணைந்து விடுவேன். எனது பள்ளி நாட்களில் கால்பந்து விளையாடும் போது நான் தான் கோல் கீப்பராக இருப்பேன்.

இன்றைக்கும் முக்கியமான கிரிக்கெட் போட்டிகளுக்கு முன் கால்பந்து விளையாடித்தான் என்னை தயார் செய்து கொள்வேன். கிரிக்கெட் மீது தீவிர பற்று வைத்திருக்கும் அதேநேரம், இந்திய விளையாட்டு ரசிகர்கள், அனைத்து போட்டிகளையும் ரசிக்க வேண்டும். மற்ற விளையாட்டுகளுக்கும் மதிப்பு தர வேண்டும்.

இங்கிலீஷ் லீக் தொடரின் போது 100 போட்டிகளுக்கும் மேல் இந்தியில் வர்ணனை செய்யவுள்ளது, கால்பந்து போட்டிகளை பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கும்.

இம்முயற்சி இந்தியா முழுவதிலும் புதிய ரசிகர்களை கொண்டு வரும் என்றும் இதேபோல மற்ற விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் எனவும் டோனி கூறியுள்ளார்.