கணினி தொடர்பான 750 முறைப்பாடுகள் நான்கு மாதங்களுக்குள்!!

308

cyber-crime

இந்த வருடத்தின் நான்கு மாதங்களுக்குள் 750 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.இதில் அதிகமான முறைப்பாடுகள் பேஸ்புக் தொடர்பானவை என்று கணினி அவசர நடவடிக்கை ஊடகப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் போலி பேஸ்புக் கணக்குகளை உருவாக்குதல், மற்றையவர்களின் பேஸ்புக் கணக்குகளில் உள்நுழைதல் தொடர்பாகவே முறைப்பாடுகள் அதிகம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேஸ்புக் கணக்குகளை ஆரம்பிக்கும் போது பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளை பின்பற்றாமையே இதற்கான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் இதன்போது சரியான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறும், அறிமுகமில்லாத நண்பர்களை நண்பர்களாக இணைத்துக் கொள்வதை தவிர்க்குமாறும் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.அத்துடன் போலி மின்னஞ்சல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.