வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு பொதுக்கூட்டம்!!

583

Pirajaikal

 

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் எதிர்வரும் 14.05.2016 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு புகையிரதநிலைய வீதி வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள முத்தையா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வவுனியா மாவட்ட பொது அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு பொதுக்கூட்டத்திற்கு வவுனியா மாவட்ட பொது அமைப்பின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், கலை இலக்கிய ஆர்வலர்கள், சமுக ஆர்வலர்கள், சமயப் பெரியார்கள், மக்கள் பிரதிநிதிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு அர்பணிப்புள்ள, மக்கள் நலன்சார் பங்களிப்பு செய்யக்கூடிய வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினை தெரிவு செய்து எதிர் காலத்தில் மக்கள் நலன்சார் பயணங்களின் முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுக்க அணி திரண்டு வருமாறு அன்புடன் அழைகின்றோம்.

வவுனியா மாவட்ட பொது அமைப்புகளின் சார்பாக
மாணிக்கம் ஜெகன்
தலைவர்
கலை தொடர்பு மையம்