வவுனியா, முல்லைத்தீவில் பல பெண்களை ஏமாற்றிய நபர் கைது!!

348

arrest

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் பல பெண்களை ஏமாற்றி மேசடியில் ஈடுபட்ட நபர்ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.

முல்லைத்தீவு பகுதியில் வழக்கொன்றில் பலகாலமாக தேடப்பட்டு வந்த குறித்த நபரினை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில் பல பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அவர்களிடம் பெற்ற பணத்தினை செலுத்த மறுத்து வந்ததாகவும் இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையில் முறையிட்டுள்ளார்கள்.

இதனையடுத்து காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார் குறித்த நபரை எதிர்வரும் 21ஆம் நாள்வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.