
வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள வித்யுலேகா ராமனின் கடவுச்சீட்டுக்கள், கிரெடிட் காட்டுகள் அடங்கிய கைப்பையை யாரோ ஒருவர் திருடிவிட்டார். இதனால் என்ன செய்வதென்று தவிப்பில் உள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் வித்யுலேகா ராமன். நடிகர் மோகன் ராமின் மகளான இவர், அவுஸ்ரேலியாவில் உள்ள வியன்னா நகருக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு இவர் தங்கியிருந்த ஹோட்டல் லொபியில், இவருடைய கைப்பையை யாரோ திருடிவிட்டனர்.
கடவுசீட்டு, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், பணம் ஆகியவை அதில் இருந்திருக்கிறது. இதனால் செய்வதறியாது தவித்துப்போன வித்யுலேகா, டுவிட்டர் மூலம் பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜிடம் உதவி கோரினார்.
இது தெரிந்ததும் நடிகை குஷ்பூ, நடிகர் கருணாகரன், பின்னணிப் பாடகர் க்ரிஷ் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அவருக்கு டுவிட்டர் மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலிய பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், நாளை இந்திய தூதரகத்துக்குச் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.





