வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (05.05.2016) மாலை 5.00 மணிக்கு வாடிவீடு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலின் போது..
முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுத்தல்
விவசாயிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளல்
மக்கள் பிரதிநிதிகள் உரிய முறையில் செயற்படாமை
பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு தாண்டிக்குளம் சாதகமில்லை
வவுனியாவில் தூரநோக்க அபிவிருத்தியினை பற்றி சிந்திக்க வேண்டும்
தற்போது பாராளுமன்றம் நடக்கின்றது. எங்களால் தெரிவு செய்யப்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்கள் எங்கே?
முதலமைச்சரின் தீர்மானத்தில் தான் பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமையும் என்பது தெரியும்
என பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் இவைகள் பற்றி விரிவாகவும் ஆராயப்பட்டது..
இந்த கலந்துரையாடலின் இறுதியாக முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாளை மறுதினம் (07.05.2016) சனிக்கிழமை வர்த்தக நிலையங்களை மூடி அமைதியான முறையில் பேரணியாக சென்று மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் பல அமைப்புக்கள் கலந்து கொண்ட போழுதும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






